அம்மாவை பற்றி ஒருசில வார்த்தைகள் ....

இந்த பக்கங்கள் என் அம்மாவுக்காக எழுதபடுபவை.
என் அம்மா......அவர்களை பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம்....அவர்கள் திறமைகள் .. குணம்...இப்படி ....எல்லா அம்மக்களும் அவரவர்களுக்கு உயர்ந்தவர் தான் ஆனா...என் அம்மா நான் பார்த்த வரையில் மிக வித்யசாமனவர்....இதை நான் மட்டுமல்ல அவரை அறிந்த அனைவரும் கூறுவது .
அம்மா படுத்த படுகையாக இருந்தபோது நான் பார்த்து வருந்துகிறேன் என்று என் அம்மா அப்பா இருவரும் என்னை வற்புறுத்தி மல்டிமீடியா கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார்கள். அப்போது அம்மா என் கவிதை, விடுகதை இவற்றை பத்திரிகைகளில் வெளியிட முடியவில்லை இப்போது இதை கற்றுக்கொண்டு அதற்காக ஒரு வெப்சைட் உருவாக்கு என்று சொன்னார்கள். ஆனால் அதை இன்று வரை நான் செய்யவில்லை.கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன...வெப்சைட் உருவாக்க பணம் தேவை ....அதனால் blog ஆவது எழுதலாமே என்று அம்மாவின் ஒரேஒரு டைரியயை மட்டும் எடுத்து வந்து எழுதுகிறேன். அவர் எழுதியது பெரும்பாலும் குழந்தைகளுக்காக தான். அவை இன்றி கடவுள் மேல் பல பாடல்கள்.
இதில் எழுதபட்டிருக்கும் அனைத்து பாடல்/கவிதைகள், விடுகதை, சொல்விளையாட்டு..அனைத்துக்கும் என் அம்மாவே சொந்தகாரி.தயவு செய்து இதை அனுபாவியுங்கள் ஆனால் இதற்கு உரிமை கொண்டாட வேண்டாம்.பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் எழுதியது .ஒருசில சிறுவர் மலர்களுக்கு அனுப்பி ஆனால் பிரசுரிக்க படவில்லை என்று சொல்லி இருக்கிறார் .
இதில் ஒரு சில விடுகதை,சொல்விளையாட்டு போன்றவற்றிற்கு எனக்கு விடை தெரிய வில்லை.அம்மா எழுதிய டைரியில் எதற்கும் விடை எழுதவில்லை.
நன்றி

Comments

  1. Nice post . Your love for amma , reminds me my situation now. Nothing can be compared with that amma's love. Best wishes to achieve more.

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : மகளிர் மட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3