குரங்கின் குறும்பைச் செய்யாதே!
குள்ளநரி போல் வாழாதே !
மரத்துக்கு மரம் தாவதே!
மனிதரை ஏய்த்து வாழதே!
பருந்தின் குணம் கொண்டு அலையாதே!
பாயும் வேங்கையாய் ஆகாதே!
பாரில் வானில் பறந்தாலும்
பண்பை என்றும் மறவாதே!
கொட்டும் தேளாய் மாறாதே!
கொடிய மிருகம் ஆகாதே!
பட்டுப் போல் மிருதுவாய்
பாப்பா!பழகி புகழ் பெறுவாய்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment