சொல்விளையாட்டு 3

1)காலில்லா நாகமதை நளினி வளர்க்கிறாள்

கையில்லா பாகைதனை பட்டு எழுதினால்

இவை என்ன ?



2)கவலையின் சொந்தம் கலைஞனுக் குள்ளது

வேடனுக்குறியது கவலையில் இருக்குது .அவை என்ன ?



3)கண்ணுக்கும் கருத்துக்கும் முதலானது

சொல்லுக்கும் வில்லுக்கும் கடையானது

இரண்டும் ஒன்றாகி எதிரில் இருந்தபோது

நான் சென்று பட்டுக் கொண்டு அது என்னை இடித்ததென்றேன்.அது என்ன?

4)பூவிலும் கட்டலாம்
பொழுதையும் குறிக்கலாம்
காலதனை நீக்கினால்
கந்தன் குடியாகலாம்
கடைதனைப் போக்கினால்
பெரியதைக் குறிக்கலாம்
மறை பொருள் கொண்டுமே
புதிர்தனை கூறினேன்
விரைவிலே நீயுமே
விடைதனை கூறுவாய்!


விடை

Comments

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

விடுகதைகள் (ஒன்று)