Posts

Showing posts from July, 2009

சொல்விளையாட்டு 3

சொல்விளையாட்டு மூன்றுக்கான விடை : 1)நகம் ,பா . 2)கலை,வலை . 3)கல் . 4)மாலை .

சொல்விளையாட்டு 2 விடை

சொல்விளையாட்டு இரண்டிற்கான விடை: கம்பு கதை எம்பு எது பந்து

சொல்விளையாட்டு 3

1)காலில்லா நாகமதை நளினி வளர்க்கிறாள் கையில்லா பாகைதனை பட்டு எழுதினால் இவை என்ன ? 2)கவலையின் சொந்தம் கலைஞனுக் குள்ளது வேடனுக்குறியது கவலையில் இருக்குது .அவை என்ன ? 3)கண்ணுக்கும் கருத்துக்கும் முதலானது சொல்லுக்கும் வில்லுக்கும் கடையானது இரண்டும் ஒன்றாகி எதிரில் இருந்தபோது நான் சென்று பட்டுக் கொண்டு அது என்னை இடித்ததென்றேன்.அது என்ன? 4)பூவிலும் கட்டலாம் பொழுதையும் குறிக்கலாம் காலதனை நீக்கினால் கந்தன் குடியாகலாம் கடைதனைப் போக்கினால் பெரியதைக் குறிக்கலாம் மறை பொருள் கொண்டுமே புதிர்தனை கூறினேன் விரைவிலே நீயுமே விடைதனை கூறுவாய்! விடை

பாப்பா பாட்டு

குரங்கின் குறும்பைச் செய்யாதே! குள்ளநரி போல் வாழாதே ! மரத்துக்கு மரம் தாவதே! மனிதரை ஏய்த்து வாழதே! பருந்தின் குணம் கொண்டு அலையாதே! பாயும் வேங்கையாய் ஆகாதே! பாரில் வானில் பறந்தாலும் பண்பை என்றும் மறவாதே! கொட்டும் தேளாய் மாறாதே! கொடிய மிருகம் ஆகாதே! பட்டுப் போல் மிருதுவாய் பாப்பா!பழகி புகழ் பெறுவாய்!

குழந்தையின் ஆசை

சின்னச் சிறகை விரித்துப் பறக்கும் சிட்டுக் குருவி வா !வா! தின்ன உனக்கு மிட்டாய் தாரேன் உந்தன் சிறகைத் தா! தா ! பச்சைக் கிளியே பரிந்தழைத்தேன் பறந்து இங்கே வா !வா ! பாலும் சோறும் உனக்கு கொடுப்பேன் உந்தன் அழகைத் தா! தா! கூக்கூ என்றே குரல் கொடுக்கும் குயிலே இங்கே வா! வா! குதித்து ஆடும் பொம்மை தாரேன் உந்தன் குரலைத் தா!தா! பள பள்ளவென்றே தொகை விரித்து ஆடும் மயிலே வா! வா! பாங்குடனே நீ கேட்பதைத் தருவேன் உந்தன் தொகை தா! தா ! கண்ணைக் காட்டி குதித்து ஓடும் புள்ளி மானே வா! வா! பச்சைப் புல்லை உனக்கு தாரேன் உந்தன் கண்ணை தா! தா! சிட்டே, கிளியே, குயிலே, மயிலே, மானே, இங்கு வாருங்கள்! தட்டாமல் நான் கேட்பதை தந்து தயவுடன் வாழ்த்திச் செல்லுங்கள்!

தலைமுறை இடைவெளி

தலைமுறை மாற்றம் தடுமாற்றம் ததிங்கினத்தோம் எனத் திண்டாட்டம் பெரியோர் சொற்களை கேட்பதில்லை பெற்றோர் சொல்வதை மதிப்பதில்லை (தலைமுறை..) சினிமா ஒன்றே உலகமென்று சிந்தை முழுவதும் நிறைத்திடுவர் தனிமையில் என்றும் கற்பனையில் தானே முழ்கிக் களித்திடுவர்(தலைமுறை..) திரையிசை கேட்டால் ஆடிடுவர் தின்பதென்றால் மட்டும் வாய்திறப்பார் அரைமணி படிக்க அழுதிடுவர் அழகாய் திரைக்கதை பேசிடுவர் ( தலைமுறை..) சுறுசுறுப் பென்றால் கசக்கிறது படிப்படி என்றால் பழிவருது கருகரு வென்றே தலைமுடுயும் ஹிப்பியைப் போலே வளர்ந்திடுது (தலைமுறை ..) சாப்பிடச் சொன்னால் சங்கடம் தான் சாதத்தைப் பிசைவது சாதனை தான் சாப்பிட்டு உடலை வருத்தாமல் ஊட்டினால் பிள்ளைகள் வளர்ந்திடுவர் (தலைமுறை..)

சொல்விளையாட்டு 2

இவை கவிதை வடிவில் உள்ள வேறு வேறு பதில்கள் கொண்டவை: கரும்பிலே ஒன்றேடுத்தால் சிலம்பாட்டம் ஆடலாம் கழுதையில் ஒன்றேடுத்தால் கேட்கப் பலர் கூடலாம் எறும்பிலே ஒன்றேடுத்தால் உயரமாகத் தோன்றலாம் எருதிலே ஒன்றேடுத்தால் கேள்வியாக கேட்கலாம் பருந்திலே ஒன்றேடுத்தால் பாலர் விளையாடலாம் விடை

சொல்விளையாட்டு 1 விடை

1.மதி 2. கோல் 3.மதி (அறிவு,நிலவு இரண்டையும் குறிக்கும் ) 4.கல் 5.யானை (ஆணை) 6.வில்

சொல்விளையாட்டு 1

1.மறதி ஒன்றை மறந்தது , நிலவு அங்கு தெரிந்தது ... 2.கோயில் நடுவே ஈ பறந்து போனது முடவன் நடக்க உதவி கிடைத்தது ..... 3.மந்தியிலும் நிலவுண்டு மறதியிலும் புத்தி உண்டு . கண்டுபிடி ....... 4.கால்தனை நீக்கி நாய்தனை அடிக்கலாம் .அது என்ன ? 5.வாலில்லா ஆட்டின் கூட மூடியில்லா பானை சேர அதன் மேல் முடிதாங்கிய அரசர் அழகுடன் பவனி வருகிறார் .... 6.விரல் நடுவே உடைந்து வேடனுக்கு உதவியது எப்படி? விடை

விடுகதை 2 விடை

1.நுரை 2.மூக்குகண்ணாடி 3.நட்சத்திரங்கள் 4.நாக்கு 5.பச்சைக்கிளி 6.தெரியவில்ல ...தெரிந்தால் தயவு சைது எழுதவும் ...நன்றி 7.தேங்காய் 8.எலுமிச்சம் ஊறுகாய் 9.தாமரை பூ 10.மருதாணி

விடுகதை (இரண்டு )

1.ஊதினால் ஓடுவான் ஒருநொடியில் மறைந்திடுவான் காற்றடிகாத பலூனதை கண்டதுண்டோ சொல்லிடுவாய்? 2.விழிக்கே உதவுவான் வேறொன்றுக்கும் உதவமாட்டான் -அவனை நாசிக்கு உரியவன்போல் நவில்கின்றனர் ஏனம்மா? 3.வைரக்கற்கள் அங்கே கொட்டிக்கிடக்குதடி அதை வாரி எடுக்க ஒரு வாஞ்சியரும் வருவதில்லை.அது என்ன? 4.வெள்ளைக்கல் கோட்டைக்குள் நீர்ப்பாம்பு கிடக்குதம்மா நீர்ப்பாம்பு பேசும் மொழி நன்றாக புரியுதம்மா.அது என்ன? 5.வானத்தில் சிறகடித்து வையத்தில் மொழிபேசி சேய்க்கொண்ட தாய் கையில் வெற்றிருக்கும் பறவையடி. 6.சேனை உண்டு படை இல்லை பாம்பு உண்டு பயம் இல்லை விரல் உண்டு கைகளில்லை உருலயுண்டு கயிறுமில்லை என்னென்ன? 7.தடையின்றி தட்டிப்பார்தால் தயங்காமல் சிரிக்கும் பிள்ளை அவன் யார்? 8.பழத்தை பக்குவம்மாக காயாக்கி பரிவுடனே விருந்துகளில் பரிமாறினேன் அதுஎன்ன? 9.வற்றாத குளமதிலே வண்டு மொய்க்காத பூக்களடி!கதிரவன் காணாத கன்னியர் வைக்காத பூ...என்ன பூ? 10.செக்கச்சிவந்த பொண்ணு ,தன் வண்ணத்தை மறைத்த பொண்ணு ,மரத்தில் அமர்ந்த பொண்ணு மகிமை உள்ள மங்களப் பெண் , அம்மியும் குழவியும் உறவாட அழகிய நங்கையர் கையில்லேறி அற்புத வண்ணம் காட்டிடுவாள் அவள் பெயர் என்ன

விடுகதைகள் (ஒன்று)

என் அம்மா விடுகதை சொல்லுவதில் வல்லவர்.அதுமட்டும் இல்லை, விடுகதை கணக்கு , சொல்விளையாட்டு போன்றவையும் இவர்களின் தனிச்சிறப்பு. இதை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன்.அம்மாவின் ஒரு டைரியை மட்டும் தான் என்னால் எடுத்து வரமுடிந்தது ...சொல்லபோனால் என் அம்மாவுக்கு ஒரு சின்ன துண்டு காகிதம் கிடைத்தால் பொது அதிலும் எதாவது கிருக்கிவிடுவார் . அம்மாவின் விடுகதை முத்துசரத்தில் கிடைத்த சில முத்துக்கள் இதோ..... 1.முக்காடு போட்ட பெண் முகத்திரையை விலக்கினால் முத்து முத்து பல்வரிசை முகமெல்லாம் மின்னுது அது என்னா? 2.மேனியெங்கும் கத்திகட்டி மேல்லியனார் கோட்டையிலே தாழம்பூ மேனிகொண்ட தென்மொழியைக் கண்டதுண்டோ? அது என்ன? 3.காலில்லா தூதப்பன் போகாத ஊரில்லை வாங்காத குத்தில்லை .இவன் யார்? 4.கண்ணுண்டு காலில்லை தலையுண்டு உடம்பில்லை என் உள்ளமஎல்லாம் வெள்ளை .நான் யார்? 5.நன்றாக படம் எடுக்கும் என் எதிரில் யாரும் நிற்பதில்லை.நான் யார்? 6.சிங்கார சிறுக்கியவள் சிரித்தால் சிரித்திடுவாள் அழுதால் அழுதிடுவாள் .அவள் யார்? 7.விதை போடாத பயிர் ஒன்னு வெட்டவெட்ட வரருதடி . அது என்னா? 8.கண்ணை சிமிட்டும் கடழகியர் கூட்டத்தில் கண்ணிமைத்து மூடாது

விடுகதை (ஒன்று) விடை

இதோ முதல் விடுகதை பதில்கள் 1.மக்காசோளம் 2.பலாபழம்(பலாசொளை) 3.தபால் (கடிதம்) 4.தேங்காய் 5.பாம்பு 6.முகம் பார்க்கும் கண்ணாடி 7.முடி 8.நிலா 9.நாற்காலி 10.மூச்சுக்காற்று தொடரும் ....