விடுகதைகள் (ஒன்று)

என் அம்மா விடுகதை சொல்லுவதில் வல்லவர்.அதுமட்டும் இல்லை, விடுகதை கணக்கு , சொல்விளையாட்டு போன்றவையும் இவர்களின் தனிச்சிறப்பு. இதை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன்.அம்மாவின் ஒரு டைரியை மட்டும் தான் என்னால் எடுத்து வரமுடிந்தது ...சொல்லபோனால் என் அம்மாவுக்கு ஒரு சின்ன துண்டு காகிதம் கிடைத்தால் பொது அதிலும் எதாவது கிருக்கிவிடுவார் .
அம்மாவின் விடுகதை முத்துசரத்தில் கிடைத்த சில முத்துக்கள் இதோ.....


1.முக்காடு போட்ட பெண் முகத்திரையை விலக்கினால் முத்து முத்து பல்வரிசை முகமெல்லாம் மின்னுது அது என்னா?

2.மேனியெங்கும் கத்திகட்டி மேல்லியனார் கோட்டையிலே தாழம்பூ மேனிகொண்ட தென்மொழியைக் கண்டதுண்டோ? அது என்ன?

3.காலில்லா தூதப்பன் போகாத ஊரில்லை வாங்காத குத்தில்லை .இவன் யார்?

4.கண்ணுண்டு காலில்லை தலையுண்டு உடம்பில்லை என் உள்ளமஎல்லாம் வெள்ளை .நான் யார்?

5.நன்றாக படம் எடுக்கும் என் எதிரில் யாரும் நிற்பதில்லை.நான் யார்?

6.சிங்கார சிறுக்கியவள் சிரித்தால் சிரித்திடுவாள் அழுதால் அழுதிடுவாள் .அவள் யார்?

7.விதை போடாத பயிர் ஒன்னு வெட்டவெட்ட வரருதடி . அது என்னா?

8.கண்ணை சிமிட்டும் கடழகியர் கூட்டத்தில் கண்ணிமைத்து மூடாது கட்டழகன் வருகிறான்.அவன் யார்?

9.கால்களுண்டு நடக்கமாட்டேன் காய்கள் இருந்தும் எழுதமாட்டேன் நான் யார்?

10.உள்ளுக்கும் வெளிக்கும் அலைதிடுவான் உடலுக்கு பெருமை தந்திடுவான் சொல்லுக்கும் செயலுக்கும் அவனே உயிர் செல்லாத காசு அவன் இல்லாவிடில் யார் அவன்?

விடை

தொடரும்........

Comments

  1. வாழ்த்துகள், உங்களோட இந்த போஸ்ட் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப் பட்டுருக்கு...

    http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_10.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அம்மாவை பற்றி ஒருசில வார்த்தைகள் ....

சொல்விளையாட்டு 1