Posts

அம்மாவை பற்றி ஒருசில வார்த்தைகள் ....

இந்த பக்கங்கள் என் அம்மாவுக்காக எழுதபடுபவை. என் அம்மா......அவர்களை பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம்....அவர்கள் திறமைகள் .. குணம்...இப்படி ....எல்லா அம்மக்களும் அவரவர்களுக்கு உயர்ந்தவர் தான் ஆனா...என் அம்மா நான் பார்த்த வரையில் மிக வித்யசாமனவர்....இதை நான் மட்டுமல்ல அவரை அறிந்த அனைவரும் கூறுவது . அம்மா படுத்த படுகையாக இருந்தபோது நான் பார்த்து வருந்துகிறேன் என்று என் அம்மா அப்பா இருவரும் என்னை வற்புறுத்தி மல்டிமீடியா கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார்கள். அப்போது அம்மா என் கவிதை, விடுகதை இவற்றை பத்திரிகைகளில் வெளியிட முடியவில்லை இப்போது இதை கற்றுக்கொண்டு அதற்காக ஒரு வெப்சைட் உருவாக்கு என்று சொன்னார்கள். ஆனால் அதை இன்று வரை நான் செய்யவில்லை.கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன...வெப்சைட் உருவாக்க பணம் தேவை ....அதனால் blog ஆவது எழுதலாமே என்று அம்மாவின் ஒரேஒரு டைரியயை மட்டும் எடுத்து வந்து எழுதுகிறேன். அவர் எழுதியது பெரும்பாலும் குழந்தைகளுக்காக தான். அவை இன்றி கடவுள் மேல் பல பாடல்கள். இதில் எழுதபட்டிருக்கும் அனைத்து பாடல்/கவிதைகள், விடுகதை, சொல்விளையாட்டு..அனைத்துக்கும் என் அம்மாவே சொந்தகாரி.தய

எந்தன் வியப்பு!!

பச்சைக் கிளிக்கு சிவந்த மூக்கை செதுக்கி வைத்தவர் யாரோ? பாடும் குயிலுக்கு இனிய குரலை கொடுத்து வைத்தவர் யாரோ? அழகிய மானுக்கு புள்ளிகள் வைத்து அழகு செய்தவர் யாரோ? ஆடும் மயிலுக்கு அழகாய் தொகையை பின்னி வைத்தவர் யாரோ? மலைகளில் மகிழ்வுடன் மரங்களை கொண்டு இறக்கி வைத்தவர் யாரோ? மாண்புடன் தரைகளில் பச்சை புல்லை பரப்பி வைத்தவர் யாரோ? கனிவுடன் சொற்களில் இனிமையை நமக்கு கலந்து வைத்தவர் யாரோ? களிப்புடன் உண்ணும் உணவின் சுவையை கூட்டி வைத்தவர் யாரோ? கயல் விழிதனிலே ஒளியினை வைத்து காண வைத்தவர் யாரோ? தாயேனும் உணர்வினில் அன்பினைக் கொட்டி தேக்கி வைத்தவர் யாரோ? தானாய் கனிந்திடும் கனியினில் தனியொரு சுவையினைக் கலந்து வைத்தவர் யாரோ? கருவினில் சேயையும் கல்லினுள் தேரையும் கருத்துடன் வளர்ப்பவர் யாரோ? வீணையில் நாதமும்,மலரினில் வாசமும் வழங்கிய வள்ளல் யாரோ? இயற்கை அழகை வாரி வழங்கி இன்பம் தந்தவன் எவனோ இன்னும் தருவான் என்றும் தருவான் ஏற்றி அவன் தாள் பணிவோம்.

வேலன்

துள்ளி வருகுது வேலென்று சொல்லி என் துன்பங்கள் ஓடுதடா!- எந்தன் துன்பங்கள் ஓடுதடா!-அந்த வள்ளிக் கணவனின் பேர் சொல்லச் சொல்ல வாயெல்லாம் இனிக்குதடா !-எந்தன் வாயெல்லாம் இனிக்குதடா! கள்ளத்தனமாக ஐம்பெரும் பூதங்கள் கட்டியிழுக்குதடா !-என்னை கட்டியிழுக்குத்டா!-அந்த வள்ளிமலை நாதன் வேலணை எண்ணிட எட்டிப் பறக்குதடா!-பூதங்கள் எட்டிப் பறக்குதடா! கொள்ளை கொள்ளையாக குமாரனின் பாடல்கள் கொட்டிக் கிடக்குதடா !-உலகில் கொட்டிக் கிடக்குதடா!-அதை அள்ளியெடுத்து ஆனந்தமாய் பாடிட உள்ளம் துடிக்குதடா!-எந்தன் உள்ளம் துடிக்குதடா ! தங்க மயிலேறி வந்திடும் கந்தனைக் காணத் துடிக்குதடா !- கண்கள் காணத் துடிக்குதடா!- அந்த அங்கயற் கன்னி அழகு மைந்தனின் அருளினை நாடுதடா !-நெஞ்சம் அருளினை நாடுதடா! வள்ளலார் பாடலில் வள்ளல் குமாரனின் வாய்மொழி கண்டேனடா!-கந்தன் வாய்மொழி கண்டேனடா!-அந்த அல்லலகற்றிடும் ஆனந்தப் பாவினில் உள்ளம் குளிர்ந்தேனடா !-எந்தன் உள்ளம் குளிர்ந்தேனடா!

முருகன்

முத்துக் குமரனடி பற்றிட வேண்டுவோர்க்கு முன்வினை தீருமடி-சகியே! முக்தியும் கூடுமடி! பக்தியுடனந்த பன்னிருகையனை பாடி துதிப்போர்க்கு -சகியே! பாவங்கள் தீருமடி! எட்டுக் குடிகொண்ட ஏறு மயிலோனை எண்ணித் துதிபோர்க்கு -சகியே! ஏழ் பிறப்பில்லையடி! குட்டுண்ட பிரம்மனும் குருவெனக் கொண்டவனை கும்பிட்டு வருவோர்க்கு -சகியே! குலவினை தீருமடி-சகியே! குருவருள் கிட்டுமடி! இந்திரன் மருகனை தென் பரங்குன்றனை இப்புவிதனில் நினைப்போர்க்கு -சகியே! இன்பங்கள் சேரும்மடி ! தணியாத சினமாற்றும் தணிகை மலையானை தரணியில் துதிப்போர்க்கு -சகியே! தடையேதும் வாராதடி! செந்தில் குமரனை சீர்மிகுவேலனை சிந்தையில் வைப்போர்க்கு-சகியே! சஞ்சலம் தீருமடி! ஆவினன் குடிகொண்ட அருள்மிகு பாலனின் அடிமலர் துதிப்போர்க்கு -சகியே! ஆனந்தம் பெருகு மடி ! அரணுக்கு குருவாகி அருமறை பொருள் சொன்ன அருள்திரு வேலணை (வெகரனை?)-சகியே! அண்டினோர் கெடுவதில்லை ! குன்று தோறாடல் கொண்ட குறமகள் நாதனை கும்பிட அருள்தருவான் -சகியே! குவலயம் மீதினிலே! கணிகொண்ட பழமுதிர் சோலை முருகனின் பதமலர் நினைபோர்க்கு-சகியே ! பழவினை தீருமடி! என்றென்று இளமையாய் எழில்கொண்ட சொலைமலையிலே இருப்பவன் முருக

சொல்விளையாட்டு 3

சொல்விளையாட்டு மூன்றுக்கான விடை : 1)நகம் ,பா . 2)கலை,வலை . 3)கல் . 4)மாலை .

சொல்விளையாட்டு 2 விடை

சொல்விளையாட்டு இரண்டிற்கான விடை: கம்பு கதை எம்பு எது பந்து

சொல்விளையாட்டு 3

1)காலில்லா நாகமதை நளினி வளர்க்கிறாள் கையில்லா பாகைதனை பட்டு எழுதினால் இவை என்ன ? 2)கவலையின் சொந்தம் கலைஞனுக் குள்ளது வேடனுக்குறியது கவலையில் இருக்குது .அவை என்ன ? 3)கண்ணுக்கும் கருத்துக்கும் முதலானது சொல்லுக்கும் வில்லுக்கும் கடையானது இரண்டும் ஒன்றாகி எதிரில் இருந்தபோது நான் சென்று பட்டுக் கொண்டு அது என்னை இடித்ததென்றேன்.அது என்ன? 4)பூவிலும் கட்டலாம் பொழுதையும் குறிக்கலாம் காலதனை நீக்கினால் கந்தன் குடியாகலாம் கடைதனைப் போக்கினால் பெரியதைக் குறிக்கலாம் மறை பொருள் கொண்டுமே புதிர்தனை கூறினேன் விரைவிலே நீயுமே விடைதனை கூறுவாய்! விடை