வேலன்

துள்ளி வருகுது வேலென்று சொல்லி என்
துன்பங்கள் ஓடுதடா!- எந்தன்
துன்பங்கள் ஓடுதடா!-அந்த
வள்ளிக் கணவனின் பேர் சொல்லச் சொல்ல
வாயெல்லாம் இனிக்குதடா !-எந்தன்
வாயெல்லாம் இனிக்குதடா!

கள்ளத்தனமாக ஐம்பெரும் பூதங்கள்
கட்டியிழுக்குதடா !-என்னை
கட்டியிழுக்குத்டா!-அந்த
வள்ளிமலை நாதன் வேலணை எண்ணிட
எட்டிப் பறக்குதடா!-பூதங்கள்
எட்டிப் பறக்குதடா!

கொள்ளை கொள்ளையாக குமாரனின் பாடல்கள்
கொட்டிக் கிடக்குதடா !-உலகில்
கொட்டிக் கிடக்குதடா!-அதை
அள்ளியெடுத்து ஆனந்தமாய் பாடிட
உள்ளம் துடிக்குதடா!-எந்தன்
உள்ளம் துடிக்குதடா !

தங்க மயிலேறி வந்திடும் கந்தனைக்
காணத் துடிக்குதடா !- கண்கள்
காணத் துடிக்குதடா!- அந்த
அங்கயற் கன்னி அழகு மைந்தனின்
அருளினை நாடுதடா !-நெஞ்சம்
அருளினை நாடுதடா!

வள்ளலார் பாடலில் வள்ளல் குமாரனின்
வாய்மொழி கண்டேனடா!-கந்தன்
வாய்மொழி கண்டேனடா!-அந்த
அல்லலகற்றிடும் ஆனந்தப் பாவினில்
உள்ளம் குளிர்ந்தேனடா !-எந்தன்
உள்ளம் குளிர்ந்தேனடா!



Comments

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3

விடுகதைகள் (ஒன்று)