முருகன்

முத்துக் குமரனடி பற்றிட வேண்டுவோர்க்கு
முன்வினை தீருமடி-சகியே!
முக்தியும் கூடுமடி!


பக்தியுடனந்த பன்னிருகையனை
பாடி துதிப்போர்க்கு -சகியே!
பாவங்கள் தீருமடி!


எட்டுக் குடிகொண்ட ஏறு மயிலோனை
எண்ணித் துதிபோர்க்கு -சகியே!
ஏழ் பிறப்பில்லையடி!


குட்டுண்ட பிரம்மனும் குருவெனக் கொண்டவனை
கும்பிட்டு வருவோர்க்கு -சகியே!
குலவினை தீருமடி-சகியே!
குருவருள் கிட்டுமடி!


இந்திரன் மருகனை தென் பரங்குன்றனை
இப்புவிதனில் நினைப்போர்க்கு -சகியே!
இன்பங்கள் சேரும்மடி !


தணியாத சினமாற்றும் தணிகை மலையானை
தரணியில் துதிப்போர்க்கு -சகியே!
தடையேதும் வாராதடி!


செந்தில் குமரனை சீர்மிகுவேலனை
சிந்தையில் வைப்போர்க்கு-சகியே!
சஞ்சலம் தீருமடி!


ஆவினன் குடிகொண்ட அருள்மிகு பாலனின்
அடிமலர் துதிப்போர்க்கு -சகியே!
ஆனந்தம் பெருகு மடி !

அரணுக்கு குருவாகி அருமறை பொருள் சொன்ன
அருள்திரு வேலணை (வெகரனை?)-சகியே!
அண்டினோர் கெடுவதில்லை !

குன்று தோறாடல் கொண்ட குறமகள் நாதனை
கும்பிட அருள்தருவான் -சகியே!
குவலயம் மீதினிலே!

கணிகொண்ட பழமுதிர் சோலை முருகனின்
பதமலர் நினைபோர்க்கு-சகியே !
பழவினை தீருமடி!

என்றென்று இளமையாய் எழில்கொண்ட சொலைமலையிலே
இருப்பவன் முருகனடி -சகியே!
அவன் இனிமையின் உருவமடி!

Comments

  1. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன்..

    முருகனின் பாமாலை..
    மனதை அள்ளுகின்றது!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. nandri sir. amma is no more . i am sure she will feel happy if she sees ur comment

      Delete

Post a Comment

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3

விடுகதைகள் (ஒன்று)