தலைமுறை இடைவெளி

தலைமுறை மாற்றம் தடுமாற்றம்
ததிங்கினத்தோம் எனத் திண்டாட்டம்
பெரியோர் சொற்களை கேட்பதில்லை
பெற்றோர் சொல்வதை மதிப்பதில்லை (தலைமுறை..)
சினிமா ஒன்றே உலகமென்று
சிந்தை முழுவதும் நிறைத்திடுவர்
தனிமையில் என்றும் கற்பனையில்
தானே முழ்கிக் களித்திடுவர்(தலைமுறை..)
திரையிசை கேட்டால் ஆடிடுவர்
தின்பதென்றால் மட்டும் வாய்திறப்பார்
அரைமணி படிக்க அழுதிடுவர்
அழகாய் திரைக்கதை பேசிடுவர் ( தலைமுறை..)
சுறுசுறுப் பென்றால் கசக்கிறது
படிப்படி என்றால் பழிவருது
கருகரு வென்றே தலைமுடுயும்
ஹிப்பியைப் போலே வளர்ந்திடுது (தலைமுறை ..)
சாப்பிடச் சொன்னால் சங்கடம் தான்
சாதத்தைப் பிசைவது சாதனை தான்
சாப்பிட்டு உடலை வருத்தாமல்
ஊட்டினால் பிள்ளைகள் வளர்ந்திடுவர் (தலைமுறை..)






Comments

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3

விடுகதைகள் (ஒன்று)