விடுகதை (இரண்டு )


1.ஊதினால் ஓடுவான் ஒருநொடியில் மறைந்திடுவான் காற்றடிகாத பலூனதை கண்டதுண்டோ சொல்லிடுவாய்?

2.விழிக்கே உதவுவான் வேறொன்றுக்கும் உதவமாட்டான் -அவனை நாசிக்கு உரியவன்போல் நவில்கின்றனர் ஏனம்மா?

3.வைரக்கற்கள் அங்கே கொட்டிக்கிடக்குதடி அதை வாரி எடுக்க ஒரு வாஞ்சியரும் வருவதில்லை.அது என்ன?

4.வெள்ளைக்கல் கோட்டைக்குள் நீர்ப்பாம்பு கிடக்குதம்மா நீர்ப்பாம்பு பேசும் மொழி நன்றாக புரியுதம்மா.அது என்ன?

5.வானத்தில் சிறகடித்து வையத்தில் மொழிபேசி சேய்க்கொண்ட தாய் கையில் வெற்றிருக்கும் பறவையடி.

6.சேனை உண்டு படை இல்லை பாம்பு உண்டு பயம் இல்லை விரல் உண்டு கைகளில்லை உருலயுண்டு கயிறுமில்லை என்னென்ன?

7.தடையின்றி தட்டிப்பார்தால் தயங்காமல் சிரிக்கும் பிள்ளை அவன் யார்?

8.பழத்தை பக்குவம்மாக காயாக்கி பரிவுடனே விருந்துகளில் பரிமாறினேன் அதுஎன்ன?

9.வற்றாத குளமதிலே வண்டு மொய்க்காத பூக்களடி!கதிரவன் காணாத கன்னியர் வைக்காத பூ...என்ன பூ?

10.செக்கச்சிவந்த பொண்ணு ,தன் வண்ணத்தை மறைத்த பொண்ணு ,மரத்தில் அமர்ந்த பொண்ணு மகிமை உள்ள மங்களப் பெண் , அம்மியும் குழவியும் உறவாட அழகிய நங்கையர் கையில்லேறி அற்புத வண்ணம் காட்டிடுவாள் அவள் பெயர் என்ன கூறிடுவாய்!

விடை

தொடரும் ...

Comments

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3

விடுகதைகள் (ஒன்று)