குழந்தையின் ஆசை

சின்னச் சிறகை விரித்துப் பறக்கும்
சிட்டுக் குருவி வா !வா!
தின்ன உனக்கு மிட்டாய் தாரேன்
உந்தன் சிறகைத் தா! தா !
பச்சைக் கிளியே பரிந்தழைத்தேன்
பறந்து இங்கே வா !வா !
பாலும் சோறும் உனக்கு கொடுப்பேன்
உந்தன் அழகைத் தா! தா!
கூக்கூ என்றே குரல் கொடுக்கும்
குயிலே இங்கே வா! வா!
குதித்து ஆடும் பொம்மை தாரேன்
உந்தன் குரலைத் தா!தா!
பள பள்ளவென்றே தொகை விரித்து
ஆடும் மயிலே வா! வா!
பாங்குடனே நீ கேட்பதைத் தருவேன்
உந்தன் தொகை தா! தா !
கண்ணைக் காட்டி குதித்து ஓடும்
புள்ளி மானே வா! வா!
பச்சைப் புல்லை உனக்கு தாரேன்
உந்தன் கண்ணை தா! தா!
சிட்டே, கிளியே, குயிலே, மயிலே,
மானே, இங்கு வாருங்கள்!
தட்டாமல் நான் கேட்பதை தந்து
தயவுடன் வாழ்த்திச் செல்லுங்கள்!

Comments

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3

விடுகதைகள் (ஒன்று)