இந்த பக்கங்கள் என் அம்மாவுக்காக எழுதபடுபவை. என் அம்மா......அவர்களை பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம்....அவர்கள் திறமைகள் .. குணம்...இப்படி ....எல்லா அம்மக்களும் அவரவர்களுக்கு உயர்ந்தவர் தான் ஆனா...என் அம்மா நான் பார்த்த வரையில் மிக வித்யசாமனவர்....இதை நான் மட்டுமல்ல அவரை அறிந்த அனைவரும் கூறுவது . அம்மா படுத்த படுகையாக இருந்தபோது நான் பார்த்து வருந்துகிறேன் என்று என் அம்மா அப்பா இருவரும் என்னை வற்புறுத்தி மல்டிமீடியா கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார்கள். அப்போது அம்மா என் கவிதை, விடுகதை இவற்றை பத்திரிகைகளில் வெளியிட முடியவில்லை இப்போது இதை கற்றுக்கொண்டு அதற்காக ஒரு வெப்சைட் உருவாக்கு என்று சொன்னார்கள். ஆனால் அதை இன்று வரை நான் செய்யவில்லை.கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன...வெப்சைட் உருவாக்க பணம் தேவை ....அதனால் blog ஆவது எழுதலாமே என்று அம்மாவின் ஒரேஒரு டைரியயை மட்டும் எடுத்து வந்து எழுதுகிறேன். அவர் எழுதியது பெரும்பாலும் குழந்தைகளுக்காக தான். அவை இன்றி கடவுள் மேல் பல பாடல்கள். இதில் எழுதபட்டிருக்கும் அனைத்து பாடல்/கவிதைகள், விடுகதை, சொல்விளையாட்டு..அனைத்துக்கும் என் அம்மாவே சொந்தகாரி.தய...
என் அம்மா விடுகதை சொல்லுவதில் வல்லவர்.அதுமட்டும் இல்லை, விடுகதை கணக்கு , சொல்விளையாட்டு போன்றவையும் இவர்களின் தனிச்சிறப்பு. இதை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன்.அம்மாவின் ஒரு டைரியை மட்டும் தான் என்னால் எடுத்து வரமுடிந்தது ...சொல்லபோனால் என் அம்மாவுக்கு ஒரு சின்ன துண்டு காகிதம் கிடைத்தால் பொது அதிலும் எதாவது கிருக்கிவிடுவார் . அம்மாவின் விடுகதை முத்துசரத்தில் கிடைத்த சில முத்துக்கள் இதோ..... 1.முக்காடு போட்ட பெண் முகத்திரையை விலக்கினால் முத்து முத்து பல்வரிசை முகமெல்லாம் மின்னுது அது என்னா? 2.மேனியெங்கும் கத்திகட்டி மேல்லியனார் கோட்டையிலே தாழம்பூ மேனிகொண்ட தென்மொழியைக் கண்டதுண்டோ? அது என்ன? 3.காலில்லா தூதப்பன் போகாத ஊரில்லை வாங்காத குத்தில்லை .இவன் யார்? 4.கண்ணுண்டு காலில்லை தலையுண்டு உடம்பில்லை என் உள்ளமஎல்லாம் வெள்ளை .நான் யார்? 5.நன்றாக படம் எடுக்கும் என் எதிரில் யாரும் நிற்பதில்லை.நான் யார்? 6.சிங்கார சிறுக்கியவள் சிரித்தால் சிரித்திடுவாள் அழுதால் அழுதிடுவாள் .அவள் யார்? 7.விதை போடாத பயிர் ஒன்னு வெட்டவெட்ட வரருதடி . அது என்னா? 8.கண்ணை சிமிட்டும் கடழகியர் கூட்டத்தில் கண்ணிமைத்து மூடாது ...
Comments
Post a Comment